Please ensure Javascript is enabled for purposes of website accessibility ஆரம்ப-காலக் கல்வி வேடிக்கை-விளையாட்டு மிக்கது (Tamil) | Berry Street Skip to main content

ஆரம்ப-காலக் கல்வி வேடிக்கை-விளையாட்டு மிக்கது (Tamil)

Young boy playing with toy

தமது குழந்தைகளுடன் பேணி வளர்க்கும் வகையிலான நல்லுறவுகளை உருவாக்கிக்கொள்ள பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலையிலுள்ள பெற்றோர்களுக்கு ‘பெரி ஸ்ட்ரீட்’ (Berry Street) அமைப்பினரது ‘ஆரம்பகாலக் கல்வி வேடிக்கை-விளையாட்டு மிக்கது’ (Early Learning is Fun (ELF)) எனும் திட்டம் ஆதரவுதவி அளிக்கிறது. சிகிச்சைகளை அடிப்படையாகக் கொண்ட தீவிர ஆதரவுதவி விளையாட்டுக்-குழுக்களின் மாதிரி ஒன்றை இது பயன்படுத்துகிறது.

வாசிப்பு, பேச்சு, பாடல்கள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் மூலமாக தமது குழந்தைகளுடன் ஒவ்வொரு நாளும் தொடர்பில் இருக்குமாறு பெற்றோர்களை ELF திட்டம் ஊக்குவிக்கிறது.

கலாசாரங்களின் பன்முகத்தன்மையை ELF திட்டமானது வரவேற்கிறது, அத்துடன் அனைத்துப் பெற்றோர்களும் அவர்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்கிறது.

‘ELF விளையாட்டுக் கல்விக் குழுக்கள்’ திட்டம் இயங்கும் விதம்

0 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் உள்ள பாதிப்புறும் நிலையிலும், அனுகூலமற்ற நிலையிலும் இருக்கும் குடும்பங்களுக்கான ‘ELF விளையாட்டுக் கல்விக் குழுக்க’ளை நாங்கள் வாராந்திர அடிப்படியில் நடாத்திவருகிறோம்.

பெற்றோர்களும், குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிக் கல்வி கற்கும் பாதுகாப்பான மற்றும் பரிச்சயமான சூழல் ஒன்றினை இந்த விளயாட்டுக்-குழுக்கள் ஏற்படுத்தித் தருகின்றன. இந்தக் குழுக்கள் மெல்பர்ன் நகரின் வட புறநகர்ப்பகுதிகளில் நடத்தப்படுகின்றன, மற்றும் இவை பின்வரும் விடயங்களின் மீது கவனக்குவிவு செலுத்துகின்றன:

  • பெற்றோரது பங்குபற்றல்
  • உறவுகளைப் பேணி வளர்த்தல்
  • குழந்தைகளது பாடசாலை ஆயத்தத்தினை மேம்படுத்துதல்.


    ஆஸ்திரேலிய அரசாங்கத்தினது ‘சமூக சேவைகள் திணைக்கள’(Department of Social Services)த்தினால் ELF திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இதற்கான தகுதி

‘ELF விளையாட்டுக் கல்விக் குழுக்க’ளை பின்வரும் வகையிலான பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் பயன்படுத்தலாம்:

அதி அவசரத் தேவைகள் உள்ள குடும்பங்களுக்கு முந்துரிமை அளிக்கப்படுகிறது.

இத் திட்டத்தினால் கிடைக்கும் பலாபலன்கள்

பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலையிலுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கென துரிதத் தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு நேர்முகமான பலாபலன்களை அளிப்பது ELF திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைப் பராமரிப்பு மற்றும் ‘கிண்டர்-கார்ட்டன்’ எனப்படும் பாலர்பள்ளிக் கல்வி போன்ற இளம் குழந்தைகளுக்கான ஆரம்ப-வயது சேவைகளைக் குடும்பங்கள் பெறுவதற்கும் இந்தத் திட்டத்தினால் உதவ இயலும்.

பலாபலன்களில் உள்ளடங்குவன:

  • பெற்றோர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பிள்ளைவளர்ப்பு ஆதரவுதவியைப் பெறுவர்
  • சமூக-ரீதி, உணர்வு-ரீதி மற்றும் அறிந்துணர் திறன்களை வளர்த்துக்கொள்ளக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஆதரவுதவி
  • புதிய திறன்கள் மற்றும் அதிகரித்துள்ள தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக இல்லங்களில் ஏற்படும் நேர்முகமான மாற்றங்கள்.

‘சமூகக் குழந்தைகள் சுகாதார மைய’(Centre for Community Child Health)த்தினால் மேற்கொள்ளப்பட்ட திட்ட மதிப்பீட்டினை

எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்

‘ELF மற்றும் எமது விளையாட்டுக் குழுக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள தயவு செய்து 03 9450 4700 எனும் இலக்கத்தில் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள் அல்லது eaglemont@berrystreet.org.au எனும் விலாசத்திற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

தமது ஆர்வங்களை வெளிப்படுத்துவதற்காகப் பெற்றோர்கள் எம்மை அழைக்கலாம், அல்லது ‘மகப்பேறு மற்றும் குழந்தை நலத் தாதி’ (Maternal and Child Health Nurse) அல்லது மற்ற தொழில்வல்லுனர் ஒருவர் பெற்றோர்கள் சார்பாக எம்முடன் பேசலாம்.

Young boy playing with toys